"நீர்கொழும்பில் திருச்சுரூபம் சேதப்படுத்தப்பட்டமைக்கும் முஸ்லிகளுக்கும் எந்த தொடர்புமில்லை"


நீர்கொழும்பில் புனித செபஸ்தியார் திருச்சுரூபம் தாக்கப்பட்ட சம்பவத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை  எனக்  தெரிவித்த நீர்கொழும்பு பிரஜைகள் ஒன்றியம், இந்த  தாக்குதலின்  பின்னணியில் அடிப்படை வாதக்குழுக்கள்    உள்ளதாகவும், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவங்களின் பின்னர்  இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின் பின்னணியில்  பொதுஜனபெரமுன கட்சியை  சேர்ந்தவர்கள் இருந்ததாகவும்  குற்றஞ்சாட்டினர்.

மேலும், நீர்கொழும்பு பகுதியில் தற்கொலைக் குண்டுத்தாக்குதலுக்கு  இலக்காகி உறவுகளை இழந்த கத்தோலிக்க மக்களுக்கும் ஏனைய  சமூகத்தினருக்கும் இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்  பொருட்டு கடுமையாக உழைத்து வருகின்றோம்.  

இவ்வாறானதொரு நிலையில் அமைதியை சீர்குலைக்கும்  வகையில்  இடம்பெறும் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.