விரைவில் விலை சூத்திரம்!


உலகச் சந்தையின் விலை மாற்றத்துக்கு ஏற்ப கோதுமை மா மற்றும் பால்மா ஆகியவற்றுக்கான விலை சூத்திரம் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவுத்துறை அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார்.

காலத்துக்கு காலம் கோதுமை மா மற்றும்  பால்மா ஆகியவற்றின் விலைகளில்  மாற்றம் ஏற்படும்  நிலை காணப்படுகிறது. இதனால் மக்கள் பெரும் அசௌகரியத்தை சந்திக்க வேண்டியுள்ளது. ஆகையால்  கோதுமை மா மற்றும் பால்மா ஆகிவற்றுக்கான  விலை சூத்திரங்களை விரைவில் அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.