நாளை தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை.



தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சை நாளை காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. இம்முறை நாடளாவிய ரீதியில் தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலம் 3 இலட்சத்து 39 ஆயிரத்து 369 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

இதன்படி குறித்த பரீட்சைக்கு சிங்கள மொழி மூலமாக 2 இலட்சத்து 55,529 மாணவர்களும், தமிழ் மொழி மூலமாக 83 ஆயிரத்து 840 மாணவர்களும் தோற்றவுள்ளனர். இதற்காக 2,995 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

காலை 9.30 மணியளவில் பரீட்சை ஆரம்பமாகவுள்ளதால் 9 மணியளவில் பரீட்சாத்திகள் அனைவரும் பரீட்டை மண்டபத்திற்கு வருகை தர வேண்டும் என்று பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார். 

பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித உயர்தர பரீட்சைகள் குறித்து தெரிவிக்கையில், 
நாளை மறுதினம் திங்கட்கிழமை கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளன. 

இம்மாதம் 31 அம் திகதி வரை இந்த பரீட்சை இடம்பெறவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.  

இம்முறை நாடளாவிய ரீதியில் 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பேர் உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இவர்களில் புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக 198,229 மாணவர்களும், பழைய பாடத்திட்டத்திற்கு அமைவாக 139,475 மாணவர்களும் தோற்றவுள்ளனர். இதற்காக நாடளாவிய ரீதியில் 2678 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.