பாராளுமன்ற தெரிவுக் குழுவில் இன்று பிரதமரிடம் விசாரணை

கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(06) சாட்சியம் வழங்கவுள்ளதாக  அக்குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

இன்று மாலை 6 மணி அளவில் அவரது சாட்சிப் பதிவு இடம்பெறும் என்று தெரிவுக்குழுவின் தலைவர், பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

அதேநேரம், ராஜாங்க அமைச்சர் ருவாண் விஜவர்தனவும், சட்ட மற்றும் ஒழுங்குகள் அமைச்சர்களாக பதவி வகித்திருந்த சாகல ரத்நாயக்க, மத்தும பண்டார போன்றவர்களும் இன்று சாட்சி வழங்க அழைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சாட்சி விசாரணைகளின் பின்னர் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சி வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினை அழைப்பது தொடர்பில் கலந்துரையாட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.