இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!


நீதிமன்றத்தை அவமதித்த விவகாரம் தொடர்பில் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கு இன்று (06) மீண்டும் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

சிசிர த ஆப்ரூ, பிரசன்ன ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இதன்போது குறித்த வழக்கின் சாட்சிதாரரான தனியார் ஊடகம் ஒன்றின் பணிப்பாளிரிடம் சாட்சி விசாரணைகள் இடம்பெற்றது. 

இதனையடுத்து குறித்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் இம்மாதம் 28 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

குறித்த வழக்கின் பிரதிவாதியான இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தில் இன்று ஆஜராகி இருக்கவில்லை என்பதுடன் அவர் உயர் தர பரீட்சை எழுதுவதற்காக இதற்கு முன்னர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றிருந்தார். 

ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி சுனில் பெரேராவினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் திகதி ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ரஞ்சன், இந்த நாட்டில் பெரும்பாலான சட்டத்தரணிகள் ஊழல்வாதிகள் என குறிப்பிட்டுள்ளதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு கூறியமையானது, மக்களுக்கு சட்டம் தொடர்பில் இருக்கும் நம்பிக்கையை சீர்குலைக்க வாய்ப்புள்ளதாகவும் குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இதனால், நீதிமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் குறித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.