ஜனாதிபதித் தேர்லுக்கு முன்னதாக மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது - மஹிந்த தேசப்பிரிய


ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்ற உத்தரவு ஒன்று கிடைக்கப்பெறாவிட்டால், ஜனாதிபதித் தேர்லுக்கு முன்னதாக மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமாயின், அதற்காக இரண்டு மாதகால அவகாசம் அவசியம் என ஏற்கனவே அறியப்படுத்தப்பட்டுள்ளதாகவ அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, ஓகஸ்ட் 15 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்ற உத்தரவு அவசியமானது என்று தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.

அவ்வாறில்லாவிட்டால், ஜனாதிபதித் தேர்தல் தாக்கம் செலுத்துவதனால், மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடமே நடத்த வேண்டி ஏற்படும்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் செப்டம்பர் 20 முதல் ஒக்டோபர் 15 வரையான காலப்பகுதியில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவித்தல் வெளியிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.