முஸ்லிம் MPகள் சிலர் சற்றுமுன் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்றனர்.

அமைச்சுப் பதவிகளை துறந்த
அமைச்சர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் நாடாளுமன்ற
உறுப்பினர்கள் மூவர் தவிர
ஏனையோர் மீண்டும்
அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க
பிரயமைச்சர்களாகப்
பதவிப் பிரமாணஞ் செய்து
கொண்டனர்.

ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன முன்னிலையில்
இவர்கள் இன்று (29)
சத்தியப்பிரமாணம் செய்து
கொண்டனர்.

இதன்படி நகர திட்டமிடல். நீர்
வழங்கல் மற்றும் உயர் கல்வி
அமைச்சர் ரவூப் ஹக்கீம்
கைத்தொழில், வர்த்தகம்,
கூட்டுறவு அபிவிருத்தி
மற்றும் நீண்ட காலமாக
இடம்பெயர்ந்த மக்களை
மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாத்
பதியுதீன் ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன
முன்னிலையில் சத்தியப்
பிரமாணம் செய்து கொண்டனர்.

விவசாயம், கிராமப்புற
பொருளாதார அலுவல்கள்,
கால்நடைகள் மேம்பாடு,
நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி
மற்றும் நீரியல் வள அபிவிருத்தி
இராஜாங்க அமைச்சர் அமீர் அலி
யும் துறைமுகங்கள் மற்றும்
கப்பல் துறை பிரதியமைச்சர்
அப்துல்லாஹ் மஹ்ரூப்
பதவியேற்றனர்.

இதேவேளை, ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த
எச்.எம்.எம். ஹரீஸ், அலி ஸாஹிர்
மௌலானா, பைசல் காசிம்
ஆகியோர்
அமைச்சு பொறுப்புகள்
ஏற்கவில்லை.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.