ரனிலுக்கு புதிய தலையிடி!! முஸ்லிம் MPக்களின் அதிரடி நடவடிக்கை!!

சமூகம் சார்ந்த பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடம்  நேற்று(21) காலை அதன் தலைவர் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் அவசரமாக கூடியது. 

பிற்பகல் 3:30 வரை இடம்பெற்ற மு.கா உயர்பீட கூட்டத்தின் பிரதானமாக கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் உட்பட அமைச்சு பொறுப்புக்களை மீண்டும் ஏற்பது தொடர்பில் ஆராயப்பட்டது. கடுமையாக சூடுபிடித்துள்ள கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் தொடர்பாக கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அங்கு விளக்கப்படுத்தியபோது சகல உயர்பீட உறுப்பினர்களும் இந்த விடயத்தை யாருக்கும், எச்சந்தர்ப்பத்திலும் விட்டுக்கொடுக்க முடியாது, அரசுக்கு நிபந்தனைகளை விதித்து உடனடியாக இதற்கொரு தீர்வை பெற வேண்டும் என கூட்டாக வலியுறுத்தினர். 

பிரதமர் ரணிலின் கோரிக்கையான அமைச்சு பதவிகளை மீள பொறுப்பெடுப்பது தொடர்பில் அங்கு வாத பிரதிவாதங்களும் கடுமையாக இடம்பெற்றது. முஸ்லிம்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் எவரும் அமைச்சு பதவிகளை ஏற்க கூடாது. 

குறிப்பாக கல்முனை பிரச்சினை உட்பட முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வராமல் யாரும் பதவிகளை ஏற்கக்கூடாது என அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான ஹரீஸும், பைசால் காசிமும் இன்னும் பலரும் வலியுறுத்தி கூறினர். 

இதனை அரசுக்கு ஒரு நிபந்தனையாக முன்வைத்து கல்முனை பிரச்சினையை ஓரிரு வாரங்களில் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். இது முஸ்லிம் சமூகத்துக்கு அவமானமான செயல். இது முஸ்லிம்களின் முகத்தில் கரிபூசியதை போன்றது என ஹரீஸ் எம்.பி பேசியதை பெரும்பான்மை உறுப்பினர்களும் கட்சியின் தலைமைக்கு வலியுறுத்தி பேசினர். 

இங்கு பேசிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், எதிர்வரும் காலத்தில் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை பிரதமர் அவர்கள் எதிர்கொண்டுள்ள நிலையில் கல்முனை விவகாரம் சம்பந்தமாக பிரதமர் தனக்கு முன்னிலையில் முஸ்லிம் எம்.பிக்களிடம் தந்த வாக்குறுதியை குறிப்பாக கல்முனை கணக்காளர் விவகாரம் தொடர்பிலான உறுதிமொழியை அவர் மீறிவிட்டார். 

கணக்காளர் விவகாரத்தில் பிரதமர் ரணில் வாக்குறுதியை மீறியதனால் அவரது தீர்மானத்தை அவர் வாபஸ் பெற வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் நாங்கள் எதிர்க்கட்சி ஆசங்களுக்கு சென்று அமரபோகும் செய்தியை நாளை முஸ்லிம் எம்பிக்களுடன் சென்று அவரை அவசரமாக சந்தித்து கூறவுள்ளோம் என்றார். 

முஸ்லிம் எம்பிக்களின் இந்த அதிரடி தீர்மானம் அடுத்துவரும் நாட்களில் அரசுக்கும், ஐக்கிய தேசிய கட்சிக்கும் பெரும் தலையிடியாகவே இருக்கப்போகிறது. 

பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ இந்த இக்கட்டான நிலையை எவ்வாறு கையாழப்போகிறார் என்பதையும், பழம் நழுவி பாலில் விழுவது போன்ற இந்த சந்தர்ப்பத்தை எதிரணி எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளும் என்பதையும் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். டாக்டர் ஷாபி விவகாரம் உட்பட அப்பாவி முஸ்லிம்கள் இன்னும் விடுதலையின்றி சிறையில் வாடும் இந்த நிலையிலும் தலைவர் ஹக்கீம் உள்ளிட்ட முஸ்லிம் எம்பிக்களின் ராஜதந்திரம் எப்படியிருக்கப் போகிறது என்பதனையும் அடுத்து வரும் நாட்களில் அறிந்து கொள்ளலாம்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.