வைத்தியர் ஷாபிக்குப் பிணை; ஞாயிற்றுக்கிழமைகளில் DCI இல் முன்னிலையாகுமாறும் உத்தரவு!!


விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குருநாகல் மருத்துவமனையின் மருத்துவர் சாஃபி சிஹாப்தீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முறையற்ற விதத்தில் சொத்து சேகரிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் குருணாகல் வைத்தியருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் அவருக்கு எதிரான வழக்கு விசாரணை குருணாகல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது.

இந்நிலையில், குறித்த வழக்கு கடந்த 11 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேக நபரான வைத்தியரை இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது. 

இதையடுத்து  வைத்தியர்  ஷாபிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கு இன்று (25) குருணாகல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே அவரை 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், 25 லட்சம் பெறுமதியான நான்கு சரீர பிணையிலும் விடுவிக்குமாறு குருநாகல் பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணிக்குள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.