அரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பி. களுத்துறையில் பேரணி

சர்வதேசத்துடனான ஒப்பந்தங்கள் மூலம் நாட்டின் சுயாதீனத்தன்மையையும், பாதுகாப்பையும் , பொருளதாரத்தை ரணில் - மைத்திரி அரசாங்கம் காட்டிக் கொடுக்க முயற்சிக்கின்றது. இதற்கு ஜே.வி.பி ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

'நம்பிக்கையை மீறிய அரசாங்கமே உடனே வெளியேறு' என்ற தொனிப்பொருளில் களுத்துறையில் இன்று இடம்பெற்ற பேரணியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த 71 வருட காலத்திற்குள் பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ள நிலைமை இந்த அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. அதே போன்றும் சட்டம், ஒழுங்கும் சீரழிந்துள்ளது. பாரிய கடன் சுமைக்குள் நாடு தள்ளப்பட்டுள்ளது. இவ்வாறான நிலைமையில் நாட்டை தொடர்ந்தும் கொண்டு செல்ல முடியாது என்றும் இதன்போது குறிப்பிட்டார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.