ரிஷாத்துக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சதொச விற்பனை நிலையத்தின் மூலம் பல்வேறு ஊழல் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அலுத் கமகே மற்றும் டி.வி.சானக உள்ளிட்ட எதிர்கட்சியினர் இன்று வியாழக்கிழமை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் அவருக்கு எதிராக முறைப்பாடளித்துள்ளனர். 

முறைப்பாடளிப்பதற்கு முன்னர் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் தெளிவுபடுத்திய பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக தெரிவித்தாவது,

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு சொந்தமாக நாடளாவிய ரீதியில் 42 நிறுவனங்கள் காணப்படுகின்றது. அவற்றில் ஒன்றான சதொச விற்பனை நிலையத்தின் மூலம் பல்வேறு ஊழல்கள் இடம்பெறுகின்றன. 

அத்தோடு ரிஷாத்துக்கு சொந்தமான தனியார் நிறுவனமொன்றில் தொழில் செய்யும் 52 ஊழியர்களுக்கு சதொச நிறுவனத்திற்கூடாகவே சம்பளம் வழங்கப்படுகின்றது. இது மாத்திரமின்றி ரிஷாத்துக்கு சொந்தமான தனியார் தொலைக்காட்சியொன்றின் ஊழியர்களுக்கு அரச நிதியிலிருந்தே சம்பளம் வழங்கப்படுகிறது. இவற்றுக்கான ஆதரங்கள் அனைத்தும் எம்மிடம் உள்ளன. அந்த ஆதரங்களுடனேயே இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் அவருக்கு எதிராக முறைப்பாடளித்துள்ளோம். 

ரிஷாத் பதியுதீன் மாத்திரல்ல. தற்போது அமைச்சரவையில் அங்கத்துவம் வகிக்கின்ற 30 அமைச்சர்களில் 20 பேர் பாரிய ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். இவை தொடர்பிலும் வெகு விரைவில் வெளிப்படுத்துவோம் என்றார். 

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.