மட்டக்களப்பு தனியார் பல்கலைகழகம் தொடர்பில் அமைச்சரவையில் அமைதியின்மை!!!

மட்டக்களப்பு தனியார் பல்கலைகழகம் தொடர்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது அமைதியின்மை ஏற்பட்டது.

வாராந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று கூடியது இதன் போது  மட்டக்களப்பு தனியார் பல்கலைகழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்று நடத்தி செல்ல இயலுமை உள்ளதா என ஜனாதிபதி வினவியுள்ளார்.

மேலும் பல்கலைகழகமொன்றின் இணைப்பீடமாக இதனை நடத்தி செல்வதற்கு ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார்.

எனினும் இதனை அரசாங்கம் சுவிகரித்தால் எதிர்காலத்தில் இலங்கையில் முதலீடு செய்ய எதிர்ப்பார்த்துள்ளவர்களுக்கு பிழையான முன்னுதாரணத்தை காட்டும் என பிரதமர் கூறியுள்ளார்.

எனவே இந்த பல்கலைகழகத்தை அனைத்து இன மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் நடத்தி செல்ல வேண்டியது கட்டாயம் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.

இதற்கு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க எதிர்ப்பை வெளியிட்டார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.