ஞானசார தேரரின் பொது மன்னிப்பை ரத்து செய்யக் கோரி ஜெனீவாவில் மனு.முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக தெரிவித்து பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரருக்கு எதிராக வெளிநாட்டிலுள்ள முஸ்லிம் புலம்பெயர் அமைப்பொன்றினால் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்திலுள்ள எஸ்.ரி.பீ. எனும் பெயரில் இயங்கும் அரச சார்பற்ற அமைப்பொன்றின் பெயரில் இந்த முறைப்பாட்டை மனித உரிமைகள் அமைப்பில் முன்வைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த முறைப்பாட்டில் குறித்த தேரருக்கு வழங்கப்பட்டுள்ள ஜனாதிபதி பொது மன்னிப்பை நீக்குமாறு கோரப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த ஏப்ரல் 21 தாக்குதல் ஒரு பயங்கரவாத நடவடிக்கை எனவும், இந்த தாக்குதலின் பின்னரான நடவடிக்கைகளிலிருந்து கிறிஸ்தவ மக்களையும், முஸ்லிம்களையும் பாதுகாக்க வேண்டியுள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய சகோதர ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.