கண்டி பிக்குமார் மாநாடு: முஸ்லிம்களிடம் பொதுபல சேனா முன்வைத்துள்ள ஓர் கோரிக்கை.


பொதுபல சேனாவின் பிக்குமார் மாநாடு தொடர்பில் முஸ்லிம்கள் தேவையற்ற பீதியடையத் தேவையில்லை என பொதுபல சேனா பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளது.

அவ்வமைப்பு நாளை நடத்த உள்ள மாநாடு தொடர்பில் கருத்து வெளியிட்ட அவ்வமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே, ஜம்மியதுல் உலமா கண்டி கிளையே முஸ்லிம் மக்களிடையே தேவையற்ற பீதியை உண்டாக்கியுள்ளதாக குற்றம் சுமத்தினார்.

தங்கள் அமைப்பு பல பிரதேசங்களில் கூட்டங்களை நடத்தியுள்ள போதும் எங்கும் வன்முறை வெடித்ததில்லை என குறிப்பிட்டுள்ள அவர் அலுத்கமை கலவரம் தொடர்பில் தங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மற்றும் சமகால அரசுகளிடம் அலுத்கமை கலவரத்தை விசாரணை செய்ய ஆணைக்குழு அமைக்குமாறு கோரிக்கை விடுத்ததாக கூறிய அவர் அவ்வாறு அமைத்தால் அது தொடர்பில் தகவல் வழங்க தயார் என குறிப்பிட்டார்.

முஸ்லிம்கள் தேவையற்ற பீதி அடைய தேவையில்லை என கூறிய அவர் தங்கள் அன்றாட வேலைகளை மேற்கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.