பரீட்சைகளுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி
எதிர்வரும் ஓகஸ்ட் 05 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

க.பொ.த. உயர்தரப் பரீட்சையை இலக்காக கொண்ட கருத்தரங்குகள் மற்றும் மேலதிக வகுப்புகள் நடத்தப்படுவது இன்று (30) நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வருடம் க.பொ.த. உயர் தர பரீட்சை ஓகஸ்ட் 05 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 31 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. 2,678 பரீட்சை நிலையங்களில், 37,704 பேர் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

அதனடிப்படையில் இன்று(30) நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை, க.பொ.த. உயர்தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, நாளை (31) நள்ளிரவு முதல் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்பரீட்சைகள் நிறைவடையும் வரை இது நடைமுறையில் இருக்குமெனவும், பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.