அனுராதபுரத்தில் கோர விபத்து மூவர் பலி; ஐவர் காயம்!!!


மதவாச்சி - அனுராதபுரம் பிரதான வீதியின் வஹமளுகொள்ளேவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். 

யாழ்ப்பாணம் திசையில் பயணித்து அதிசொகுசு பேருந்து ஒன்றும் தம்புள்ளை நோக்கி பயணித்த லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் பேருந்தில் பயணித்த 8 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் மூவர் உயிரிழந்துள்ளனர். 

யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 53, 30 மற்றும் 12 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 

விபத்தில் காயமடைந்த ஏனையவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது 

குறித்த விபத்துடன் தொடர்புடைய லொறி ஓட்டுனர் அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.