ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சுகயீன விடுமுறை போராட்டம் தோல்வி!!!

இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தால், இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட சுகயீன விடுமுறை போராட்டம் தோல்வியடைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அனைத்து ஆசிரியர்கள் சங்கமும் ஒன்றிணைந்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தீர்மானித்திருந்த நிலையில், இலங்கை ஆசிரியர் சங்கம் இவ்வாறான பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டு அனைத்து ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையை காட்டிக்கொடுத்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கை ஆசிரியர்கள் சங்கமானது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்த ஒரு தொழிற்சங்கம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், “ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பாரிய வேலைநிறுத்த போராட்டமொன்றுக்கு நாங்கள் ஏற்பாடுகளை மேற்கொண்டு வந்த நிலையில், இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டவர்கள், ஒட்டுமொத்த ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகளை காட்டிக்கொடுத்துவிட்டனர். 

அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்திருந்த நிலையில், இவர்கள் தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்பட்டுள்ளனர்.

இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட ஆசிரியர் தொழிற்சங்கமானது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்த ஒன்றாகும். இது தொடர்பில் நாங்கள் தேடிய போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் தலைவர்களான மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ போன்றவர்கள் கூட இது தொடர்பில் அறிந்திருக்கவில்லை. 

“தமது பலத்தினை கட்டியெழுப்புவதற்காக அக்கட்சியில் உள்ள சிலரது ஆதரவுடன் இவர்கள் இந்த நடவடிகையில் ஈடுபட்டுள்ளனர். நாங்கள் எமது நடவடிக்கையில் உறுதியாக உள்ளோம். இந்த அரசாங்கத்தின் செயற்பாட்டில் நாங்கள் அதிருப்தியில் உள்ளோம். அனைத்து ஆசிரியர்களும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் நோக்கில் உள்ளனர். 

நாங்கள் எமது போராட்டத்தை எதிர்காலத்தில் நிச்சயமாக முன்னெடுப்போம். இன்றைய தினம் வழமையான பாடசாலை நடவடிக்கைகள் இடம்பெற்றதாகவே நான் நினைக்கின்றேன்.” என்றார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.