மஹிந்த, மைத்ரி இணைந்து புதிய கூட்டணி உருவாக்கம்! வேட்பாளர் தொடர்பில் முரண்பாடு!

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன முன்னணி என்ற பெயரில் அடுத்த தேர்தலை கூட்டாக எதிர்கொள்வது தொடர்பாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் ஆலோசித்து வருகின்றன.

எதிர்வரும் தேர்தல்களில் கூட்டாக முகம்கொடுப்பதாக இருந்தால், இந்த பெயரில் கூட்டணி அமைப்பதற்கு அந்த கட்சிகளுக்கு இடையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கூட்டணிக்கான பெயர் பரிந்துரைக்கப்பட்டு இணக்கம் காணப்பட்டுள்ள போதிலும் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இரு தரப்பிலும் தொடர்ந்தும் சர்ச்சையே நிலவுகின்றது.

இரண்டு கட்சிகளுக்கும் இடையில் இதுவரை 06 கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.