இலங்கை முஸ்லிம்களுக்கு முஸ்லிம் கலாச்சார திணைக்களம் விடுக்கும் ஓர் மகிழ்ச்சிகர செய்தி!!!

இலங்கைக்கு 500 மேலதிக ஹஜ் கோட்டாக்கள் கிடைத்துள்ளதாக முஸ்லிம் கலாச்சார திணைக்களத்தின் பணிப்பாளர் மலிக் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவின் ஹஜ் விவகாரங்களுக்கான அமைச்சு இதனை இலங்கை முஸ்லிம் கலாசார திணைக்களத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கமைய இன  தினம் ஹஜ் கமிட்டி ஹஜ் முகவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்திய பின்னர் ஹஜ் கோட்டாக்களை பகிர்ந்தளிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

நாளைய தினம் இடம்பெறும் கலந்துரையாடலில் ஏற்படுத்திக்கொள்ளப்படும் இணக்கப்பாடுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும் எனவும், அதன் பின்னர் ஹஜ் முகவர்களை ஹாஜிகள் நாடுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மேலதிக கோட்டாக்கள் வழங்கப்படும் போது திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட ஹாஜிகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கடந்த 2015 ம் ஆண்டு மேலதிக கோட்டங்களை பெற்றுத்தருவதாக கூறி சில போலியான திணைக்களத்தில் பதிவு செய்யப்படாத முகவர்கள் மோசடியில் ஈடுபட்டிருந்தனர்.

இலங்கை முஸ்லிம் கலாசார திணைக்களத்தில் 92 ஹஜ் முகவர்கள் தங்களை பதிவு செய்துள்ள அதேவேளை அவர்களின் விபரங்களை நீங்கள் கீழ் உள்ள இணைப்பின் ஊடக உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.