"படுகொலைகளை உருவாக்கும் தொழிற்சாலையே மட்டு. ஷரீஆ பல்கலைக்கழகம்" - அத்துரலிய

மட்டக்களப்பு ஷரீஆ பல்கலைக்கழகம் மனித படுகொலைகளை உருவாக்கும் தொழிற்சாலை. அது சஹ்ரானின் குண்டுத் தாக்குதலைவிட நூறுமடங்கு பயங்கரமானது என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் பாராளுமன்றில் நோற்று தெரிவித்தார்.

அத்துடன் அனைத்து முஸ்லிம் அடிப்படைவாதிகளையும் ஒன்றுதிரட்டுவதற்காக அமைக்கப்பட்டதுதான் இந்த மட்டக்களப்பு பல்கலைக்கழகம். இது இலங்கைக்கு மாத்திரமல்ல, முழு ஆசியாவுக்கும் அச்சுறுத்தலானதாகும். அத்துடன் இந்த முஸ்லிம் பயங்கரவாதம் உலகம் பூராகவும் இருந்து வருகின்றது என்றார்.

இதன்போது ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவிக்கையில், இஸ்லாமிய பயங்கரவாதம் இல்லை. ஐ.எஸ். முஸ்லிம் அமைப்பு அல்ல என தெரிவித்தபோது, அதற்கு தேரர் பதிலளிக்கையில் தலிபான், அல்கைதா போன்ற பல பயங்கரவாத அமைப்புக்கள் இருக்கின்றன. அவை அனைத்தும் முஸ்லிம் என்ற பெயரிலே இருக்கின்றன என்றார். இதன்போது மீண்டும் மஹ்ரூப் எம்.பி. குறுக்கிட இருவருக்குமிடையில் கடும்வாக்குவாதம் ஏற்பட்டது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.