மஹிந்த ராஜபக்ஸவுக்கு சர்வதேச விருது!!

எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு நேற்று(21) இந்தியாவின் வேல்ட் ஐகன் விருது வழங்கும் விழாவில் சர்வதேச விருதொன்று வழங்கப்பட்டுள்ளது.

எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபேற்ற விழாவிலேயே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில் வல்லுநர்கள் 10 பேருக்கான விருது இந்த விழாவில் வழங்கப்பட்டது. இதன்போது, நாட்டில் நிலவிய 30 வருட யுத்தத்தை நிறைவு செய்து உலகிற்கு முன்மாதிரியை வழங்கியமைக்காக இந்த விருது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.