கினிகத்தேனை மண்சரிவில் சிக்கிய ஜமால்டீன் என்ற நபரின் சடலம் மீட்பு.

சீரற்ற காலநிலை காரணமாக கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினிகத்தேனை நகரில் நேற்று இடம்பெற்ற மண்சரிவு காரணமாக 10 கடைகள் அடங்கிய கட்டிடத் தொகுதி முற்றாக சரிந்து அனர்த்தத்திற்குள்ளாகியது.

இந்த நிலையில் அக்கடைகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்குண்ட நிலையில் காணாமல் போயிருந்த ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று காலை முதல் தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர், பொது மக்கள் தேடுதல் பணிகளில் ஈடுப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் நிலச்சரிவில் சிக்குண்டு இருந்த கினிகத்தேனை பகுதியை சேர்ந்த 64 வயதான கே.எம். ஜமால்டீன் என்ற நபரே சடலமாக இன்று காலை 9 மணியளவில் மீட்கப்பட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.