முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை சம்பவம் தொடர்பில் பொதுஜன முன்னணி உறுப்பினர் ஒருவருக்கு நேர்ந்த கதி!!

நாத்தாண்டியா பிரதேச சபையின் பொதுஜன முன்னணி உறுப்பினர் உபுல் ஹேரத், அடுத்த மாதம் 7ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஏப்ரல்21 தாக்குதலின் பின்னர், மாரவில, தும்மோதர - கொட்டாரமுல்லை மற்றும் மொகேல போன்ற பகுதிகளில் கலகம் விளைத்ததாக அவர் மீது குற்றம் சுமுத்தப்பட்டுள்ளது.

இதன்பின்னர் அவர் வெளிநாடு சென்று நேற்று நாடு திரும்பிய வேளையில் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் இன்று மாரவில மாவட்ட நீதிமன்ற நீதவான் மகேந்திர ராஜாவின் முன்னிலையில் நிறுத்தப்பட்டபோது, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 7ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.