பிரதமரை சந்தித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!!!

அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்பது தொடர்பில் பதவி விலகிய அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் ஆகியோர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்வார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உட்பட அனைத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பிரதமர் அலுவலகத்தில் நேற்று இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் மதரஸா பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்பது தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹ்மான் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.