இலங்கைக்கு ஐ.நா பாராட்டு!!


உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் இலங்கையில் அன்றாட நடவடிக்கைகளை வழமைக்குக் கொண்டு வருவதற்கு சமகால அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபை பாராட்டியுள்ளது.

அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் தொடர்பில் ஆராய ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி கிலெமன்ட் வோவ்லேயை, அமைச்சர் திலக் மாரப்பன சந்தித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சில் இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றது. அரசாங்கம் மக்களின் ஒன்றுகூடும் உரிமையை உறுதிப்படுத்தியிருப்பதாக அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்தார்.

“சட்டவாட்சி, ஜனநாயகம் என்பனவற்றை உறுதிப்படுத்த ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச நிறுவனங்கள் இணைந்து செயற்படுகின்றன. அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தாலும், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமை வரையறுக்கப்படவில்லை. எதிர்ப்பு நடவடிக்கைகள், தொழிற்சங்க நடவடிக்கைகள் என்பன நாட்டில் இடம்பெறுகின்றமை இதற்கு சிறந்த உதாரணமாகும்” என்று அவர் கூறினார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.