கிண்ணத்தை சுவீகரிக்கும் கனவு யாருக்கு நிஜமாகும்?


இம்முறை உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று(14) நடைபெறவுள்ளது.

முதற்தடவையாக உலகக்கிண்ணத்தை சுவீகரிக்கும் எதிர்பார்ப்புடன் இங்கிலாந்தும் நியூசிலாந்தும் இன்றைய இறுதிப்போட்டியில் களமிறங்கவுள்ளன.

கனவான்களின் விளையாட்டான கிரிக்கெட்டை உலகிற்கு அறிமுகப்படுத்திய நாடாக இங்கிலாந்து புகழப்பட்டாலும் , 44 வருட உலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் ஒருமுறையேனும் கிண்ணத்தை சுவீகரிக்கவில்லை.

அதிக சந்தர்ப்பங்களில் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த அணியாக பதிவாகியுள்ள இங்கிலாந்து, 28 வருடங்களின் பின்னர் இவ்வருடம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

நடப்பு சாம்பியனான அவுஸ்திரேலியாவை அரையிறுதிப் போட்டியில் வீழ்த்தி , இங்கிலாந்து நான்காவது தடவையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

உலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இரு அணிகளும் இறுதிப்போட்டியில் மோதவுள்ள முதல் சந்தர்ப்பமாக இன்றைய போட்டி அமையவுள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான இறுதிப்போட்டி ,கிரிக்கெட்டின் தாயகமான லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று மாலை 3 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.