கம்பளை, மரியாவத்தை சந்தியில் போராட்டம்!!!

கம்பளை, மரியாவத்தை சந்தியில் இன்று (03) முற்பகல் நான்காவது தடவையாகவும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. 

கம்பளையிலிருந்து மரியாவத்த ஊடாக உடகமவுக்கு செல்லும் பிரதான வீதியை புனரமைத்து தருமாறுகோரியே குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

பிரதேச மக்கள், சர்வமதத் தலைவர்கள் என பெருமளவானோர் இதில் கலந்துகொண்டனர். 

இதற்கு முன்னரும் வீதியை இடைமறித்து மூன்று தடவைகள் மக்கள் போராடினர். எனினும், கோரிக்கை நிறைவேற்றப்படாததன் காரணமாகவே மீண்டும் இன்று வீதியில் இறங்கினர். 

தெம்பிலிகல, வல்லாகொட உட்பட மேலும் சில கிராமங்களுக்கு இந்த வீதி ஊடாகவே பயணிக்கவேண்டியுள்ளது. எனினும், அது பேரவலமாக காட்சிதருகின்றது. பாதையை புனரமைத்துதருமாறு பலதடவைகள் கோரிக்கை விடுத்தும் இன்னும் தீர்வு கிட்டவில்லை. தீர்வு கிடைக்கும் வரையில் நாம் ஓயவும்மாட்டோம் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.