கோத்தபாய ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவது உறுதி- வெளியாகியது புதிய தகவல்


பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச  நிறுத்தப்படுவது உறுதியாகிவிட்டது என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 11 ம் திகதி இடம்பெறவுள்ள கட்சியின் மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கட்சியின் தலைமைப்பொறுப்பை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்வார் எனவும் அதன் பின்னர் அவர் அனேகமாக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பார் எனவும் சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.

சண்டே டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது.

இந்த சந்திப்பிற்கு முதல்நாள் பொதுஜனபெரமுனவின் கட்சி தலைவர்களிற்கு மகிந்த ராஜபக்ச தனது முடிவை தெரிவிப்பார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கடந்த புதன் கிழமை சிங்கப்பூரிலிருந்து மருத்துவசிகிச்சையின் பின்னர் நாடு திரும்பினார்.

அவரை வரவேற்பதற்கான நிகழ்வுகள் எதுவும் இடம்பெறாமலிருப்பதை உறுதி செய்ய மகிந்த ராஜபக்ச விரும்பினார்.

இன்னமும் கோத்தபாய குறித்த அறிவிப்பு உத்தியோகபூர்வமாக வெளியாகததன் காரணமாகவே  அவரது வருகைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படவில்லை.

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படும் நிகழ்வினை பெருமளவில் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் கோத்தபாய ராஜபக்சவை களனி விகாரைக்கு பேரணியாக அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் பின்னர் கோத்தபாய ராஜபக்சவை  அனுராதபுரம் மகாபோதி விகாரைக்கு வாகனப்பேரணியாக அழைத்து செல்வதற்கான திட்டங்களும் காணப்படுகின்றன,அதன் பின்னர் அவர் கண்டிக்கும் செல்வார் என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.