கொடிய விஷத்தைக் கொண்டு தீண்டும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தர்மத்தின் வழியில் அழிப்போம் - ஞானசார


இஸ்லாமிய அடிப்படைவாதம் விஷப் பாம்பாகும் அதனை கண்ட இடத்தில் நசுக்கி விடுங்கள். கொடிய விஷத்தைக் கொண்டு தீண்டும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தர்மத்தின் வழியில் அழிப்போம் என பொதுபல சேனா அமைப்பின்  பொது செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தோற்கடிக்கும் பொறுப்பை இந்நாட்டிலுள்ள பிக்குகளிடம் ஒப்படைக்குமாறு ஆட்சியாளர்களிடம் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

உலமா சபையுடனான அனைத்து வித பேச்சுவார்த்தைகளையும் அரசாங்கமும் அதிகாரிகளும் உடனடியாக நிறுத்த வேண்டும். தனி சிங்கள இராச்சியத்தை உருவாக்குவதற்கான போராட்டத்தை கண்டியிலிருந்தே ஆரும்பிப்போம்.

அத்துடன் தேசிய பிரச்சினையாக காணக்ககூடிய இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக போராடி நாட்டை பாதுகாக்க தமிழ் சகோதரர்களும் எங்களுடன் ஒன்று சேருங்கள் எனவும் அழைப்பு விடுத்தார்.

பொதுபலசேனா அமைப்பின் மாநாடு நேற்று கண்டியில் இடம்பெற்றது. இதன் போதே ஞானசார தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.