வைத்தியர் ஷாபியின் அடிப்படை உரிமை மனுவுக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!!

இரகசிய பொலிஸார் தன்னை கைது செய்து தடுத்து வைத்துள்ளமை சட்டவிரோமானது என்று உத்தரவிடக் கோரி குருணாகலை வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி ஆராய்ந்து பார்க்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

குறித்த மனு இன்று நீதிபதி புவனேகு அலுவிஹார தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய குழாவினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இதன்போது, மனுவின் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கு அறிவிப்பு உரிய முறையில் கிடைக்கவில்லை என சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான, பிரதி சொலிஸிட்டர் நாயகம் துசித் முதலிகே தெரிவித்துள்ளார். 

அதனடிப்படையில் மனுவின் பிரதிவாதிகளுக்கு அறிவிப்பு விடுத்த பின்னர் குறித்த வழக்கை விசாரணை செய்ய திகதி வழங்குமாறு அவர் தெரிவித்துள்ளார். 

இதன்போது மனுதாரரான வைத்தியர் சார்ப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, தன்னுடைய கட்சிக்காரர் தடுப்புக்காவல் முடிவடைந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

அதனடிப்படையில் குறித்த வழக்கை ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுப்பதாகவும் பிரதிவாதிகளுக்கு மீண்டும் அறிவிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.