ஞானசார தேரரின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி கடும் அதிருப்தி!!!

முஸ்லிம்கள் மீதான கெடுபிடிகள் நாளாந்தம் அதிகரித்து வருகின்ற நிலை நேற்று முன்தினம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி சந்திதனர்.

குறித்த சந்திப்பில் சிறையிலிருந்து ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட ஞானசார தேரர் குறித்தும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் முறையிட்டனர்.

நீங்கள் மன்னிப்பு வழங்கி சிறையிலிருந்து விடுதலை செய்த ஞானசார தேரர் இன்று உலமா சபையை விமர்சித்து முஸ்லிம் சமூகத்திற்கு எதிராகப் பேசி வருகிறார். பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார். ஜனாதிபதி என்ற வகையில் நீங்கள் இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையேல் இன முரண்பாடுகள் மேலெழும் என்றும் தெரிவித்தனர்.

இதனையடுத்து, ஞானசார தேரரை தொலைபேசியூடாக தொடர்புகொண்ட ஜனாதிபதி, முஸ்லிம்களுக்கு எதிரான அவரது கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் தனது அதிருப்தியினை வெளியிட்டார். அத்துடன் தொடச்சியாக இவ்வாறு செயற்பட்டால் மீண்டுமொரு தடவை என்னால் உங்களுக்கு மன்னிப்பு வழங்க முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.