இஸ்ரேல் அரை மணி நேரத்தில் அழிக்­கப்படும்! எச்சரிக்கை விடுக்கும் முக்கிய நாடு!!!

அமெ­ரிக்கா ஈரான் மீது தாக்­குதல் நடத்­து­மானால் இஸ்ரேல் அரை மணி நேரத்தில் அழிக்­கப்பட்டு விடும் என ஈரா­னிய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கை ஆணை­யகத் தலைவர் மொஜ்­தபா ஸோல் நோர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரா­னுக்கும் அமெ­ரிக்­கா­வுக்­கு­மி­டையி­லான பதற்­ற­நிலை அதிகரித்­துள்ள நிலையி­லேயே இவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இந்­நி­லையில் இஸ்­ரே­லா­னது ஈரான் தனது தாழ் செறி­வூட்­டப்­பட்ட யுரே­னிய கையி­ருப்பின் அளவை அணு­சக்தி உடன்­ப­டிக்­கையில் வரை­ய­றுக்­கப்­பட்­ட­திலும் அதி­க­மாக்­கி­யுள்­ளமை குறித்து அந்­நாட்­டுக்கு எதி­ராக ஐரோப்­பிய ஒன்­றியம் தடை­களை விதிக்க வேண்டும் என அழைப்புவிடுத்­துள்ளது.

இதேவேளை ஈரான் அணு­சக்தி உடன்­ப­டிக்­கையை மீறி­யுள்ள நிலையில் நீங்கள் அதற்­கான நட­வ­டிக்­கையை எடுக்க வேண்டும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்ஜமின் நெட்டன்யாஹு ஐரோப்பிய நாடுகளைக் கோரியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.