வைத்தியர் ஷாபிக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ..!

வைத்தியர் ஷாபி மீதான வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவரும் குருணாகல் நீதவான் நீதிமன்ற கட்டடத்துக்கு அருகில் சிங்களே அமைப்பினால் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது,

சிங்கலே தேசிய அமைப்பின் தலைவர் டேன் பிரியசாத் உள்ளிட்ட குழுவொன்றினாலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வைத்தியர் ஷாபி மீது முறையற்ற விதத்தில் சொத்து சேகரித்தமை, தாய்மாருக்கு கருத்தடை செய்தமை மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புக்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணைகள' குருணாகல் நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.

அத்துடன் இதன் போது தாய்மார்களின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரிக்க பொருத்தமான மருத்துவ பரிசோதனை என்னவென்பது தொடர்பான அறிக்கையொன்றும் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

தற்போது வழக்கின் விசாரணைகள்' குருணாகல் நீதவான் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.