ஏப்ரல் 21 தாக்குதல்; நபர் ஒருவருக்கு எதிர்பாராமல் கிடைத்த அதிஷ்டம்...!!

ஏப்ரல் 21 தாக்குதல்தாரிகள் தொடர்பான தகவல்களை வழங்கிய நிட்டம்புவ பகுதியை சேர்ந்த பாரவூர்தி உரிமையாளருக்கு சன்மானம் வழங்கப்படவுள்ளது.

பதில் காவற்துறை மா அதிபர் சந்தன விக்ரமரத்ன இது தொடர்பான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி அவருக்கு 50 லட்சம் ரூபாய் சன்மானமாக வழங்கப்படவுள்ளதாக காவற்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

ஏப்ரல் 21 தாக்குதல்களுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளின் பொருட்கள், பாரவூர்தி ஒன்றின் மூலம் நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி மற்றும் சாய்ந்தமருது பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது தொடர்பான தகவல் குறித்த வாகன உரிமையாளரால் காவற்துறைக்குதகவல் வழங்கப்பட்டது.

இதற்கமைய பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது, பயங்கரவாதிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டன.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.