ஏப்ரல் 21 தாக்குதலில் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை - ஜனாதிபதி

ஏப்ரல் 21 நடந்த பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அவர்களுக்கு எதிராக தெளிவான சான்றுகள் இருப்பதாகவும், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று(16) பெலேந்த ரஜமகா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தாது கோபுரம், நூல் நிலையம் மற்றும் சமய உரை மண்டபம் ஆகியவற்றை மகாசங்கத்தினரிடம் கையளிக்கும் புண்ணிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

அங்கு உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது,

ஏப்ரல் 21 அன்று கிட்டத்தட்ட 300 அப்பாவி மக்களின் உயிரைப் பறித்த பயங்கரவாதத்தின் மிருகத்தனமான செயலின் குற்றவாளிககளை தண்டிப்பதை தடுக்கும் நோக்கில் மரண தண்டனையை ஒழிப்பதற்கான பாராளுமன்றச் சட்டத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சி நடப்பதாக நான் நம்புகிறேன்.

நாட்டின் குற்றவியல் சட்டத்தின்படி, கொலை, அரசாங்க விரோத சதி மற்றும் பயங்கரவாத செயல்களில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு மரண தண்டனை கிடைக்கும். ஆனால் மரண தண்டனையை ஒழிக்க அரசாங்கத்தின் சில தரப்பு எடுக்கும் முயற்சிகளால் அப்படி தண்டனை வழங்க முடியாத நிலை ஏற்படலாம்.

மத்திய வங்கி கொள்ளையில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், நாட்டிற்கு வெளியே உள்ளவர்களுக்கு சர்வதேச பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன, அர்ஜுன் மகேந்திரனை மீண்டும் இலங்கைக்கு அழைத்துவர சிங்கப்பூர் பிரதமருடன் தனிப்பட்ட முறையில் பேசியுள்ளேன். அந்த முயற்சிகள் தொடரும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.