ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் காவற்துறைமா அதிபருக்கும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கும் நேர்ந்த கதி!!!

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் கொலைக்குற்ற சந்தேக நபர்கள் என்ற அடிப்படையில் காவற்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோ ஆகியோரை நீதிமன்றில் முன்னிறுத்த பணிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரினால், பதில் காவற்துறை மா அதிபர் சந்தன விக்ரமத்னவிற்கு இந்த பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகளுக்கான சாட்சியங்கள் இருப்பதாகவும் சட்டமா அதிபரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் இருவருக்கும் எதிராக குற்றவியல் விசாரணையை நடத்துமாறு விடுக்கப்பட்ட அறிவுறுத்தலின் பிரகாரம், கிடைக்கப்பெற்ற அறிக்கையின் அடிப்படையில் இந்த பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணையின் அறிக்கை, கடந்த மாதம் 27ம் திகதி சட்டமா அதிபருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த அறிக்கையின்படி, காவற்துறைமா அதிபரும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோவும் தங்களது கடமைகளை புறக்கணித்து செயற்பட்டுள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி அவர்களுக்கு எதிராக மனித படுகொலை குற்றச்சாட்டு முன்வைக்கும் நிலைமை இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அவர்களை கொலைக்குற்ற சந்தேகநபர்கள் என்ற அடிப்படையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபர் பதில் காவற்துறைமா அதிபரை அறிவுறுத்தி இருப்பதாக, சட்டமா அதிபர் திணைக்களத்தின் இணைப்பாளர் சட்டத்தரணி நிசாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த அறிவுறுத்தல் அடிப்படையில் பதில் காவற்துறைமா அதிபர் இதுவரையில் செயற்படவில்லை என்பதால், அதுதொடர்பாக இன்றைய தினத்துக்குள் அவரை விளக்கமளிக்குமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தி இருப்பதாகவம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.