ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் CID க்கு அழைக்கப்பட்டிருந்த பூஜிதவும் ஹேமசிறி பெர்னாண்டோவும் வைத்தியசாலையில் அனுமதி.

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் கொலைக்குற்ற சந்தேக நபர்கள் என்ற அடிப்படையில் காவற்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோ ஆகியோரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் இன்று வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ இன்று காலை இருதய சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் தாம் எதிர்வரும் 8ம் திகதியே அதில் முன்னிலையாகவிருப்பதாக ஹேமசிறி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார.

இதேவேளை பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர திடீர் சுகயீனம் காரணமாக நார‍‍ஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.