மகிந்த ராஜபக்ஷவின் வீட்டில் ஒப்பந்தம் கைச்சாத்து - 10 கட்சிகள் ஒன்றாக இணைந்தன....!

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண சில அரசியல் கட்சிகளுடன் இணைந்து புதிய கூட்டணியை அமைத்துள்ளது.

குறித்த கூட்டணிக்காக அரசியல் கட்சிகளுக்கிடையில் ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தம் இன்று காலை எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷவின் வாசஸ்தளத்தில் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் ஒன்றிணைந்த எதிர்கட்சி மற்றும் நாடாளுமன்றில் அங்கம் வகிக்காத 10 அரசியல் கட்சிகள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய, 
  1. ஹேமகுமார நாணயக்கார - மௌபிம ஜனதா கட்சி.
  2. சதாசிவம் - இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி.
  3. கமல் நிசங்க - லிபரல் கட்சி
  4. சரத் மனமேந்திர - புதிய சிஹல உறுமய
  5. அருண டி சொய்சா - ஜனநாயக தேசிய அமைப்பு
  6. விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) - தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி
  7. சரத் விஜேரத்ன - பூமிபுத்திர கட்சி
  8. ஜயந்த குலதுங்க - எக்சத் லங்கா மகா சபை
  9. எஸ் ஜே. துஷ்யந்தன் - ஈழவர் ஜனநாயக முன்னணி
  10. முபாரக் அப்துல் மஜிஸ் - முஸ்லிம் உலமா கட்சி

ஆகிய கட்சிகளே குறித்த ஒபந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.