கினிகத்ஹேனவில் மண் சரிவு - 10 கடைகள் மண்ணுக்குள் - ஒருவரை காணவில்லை.....!

கினிகத்ஹேனையில் இடம்பெற்ற மண்சரிவில் 10 வர்த்தக நிலையங்கள் மண்ணிற்குள் புதையுண்டுள்ளதோடு வர்த்தக நிலையத்தில் பணியாற்றிய ஒருவர் காணாமல் போயுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

கினிகத்ஹேனவிலிருந்து கண்டி நோக்கி செல்லும் வீதியில் கினிகத்ஹேன காவல் நிலையத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த வர்த்தக தொகுதி கட்டிடம் ஒன்றே மகாவெலி கங்கை நோக்கி முழுமையாக சரிந்துள்ளது. 

சில்லறை கடைகள், மரக்கறி கடைகள், மற்றும் பென்ஷி கடைகள் அகியன காணப்பட்டுள்ளதோடு பென்ஷி வர்த்தக நிலையத்தில் கடமையாற்றிய ஒருவரே காணாமல் போயுள்ளார். 

மேலும் குறித்த பகுதியில் தொடர்ச்சியாக மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர். குறித்த பகுதியில் மண் சரிவு அபாயம் காணப்படுகின்றமையினால் காணாமல் போயுள்ள குறித்த நபரை மீட்கும் பணிகள் தாமதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் கினிகத்ஹேன முதல் கண்டி வரையிலான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.