BREAKING NEWS: அரசாங்க அலுவலர்களின் ஆடைபற்றிய திருத்தியமைக்கப்பட்ட சுற்றறிக்கை சற்றுமுன் வெளியிடப் பட்டது.

அரச அலுவலகங்களில் அரச உத்தியோகத்தர்கள் அணிய வேண்டிய ஆடை சம்பந்தமான புதிய சுற்றறிக்கை பொது நிர்வாகம் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளரால் சற்றுமுன் வௌியிடப்பட்டுள்ளது. 

2019.05.29 அன்று வௌியிடப்பட்ட சுற்றறிக்கையை திருத்தம் செய்ய கடந்த அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. 

அதன்படி இன்று புதிய சுற்றறிக்கை குறித்த அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ளது. 

சாரி அல்லது ஒசரி மாத்திரம் அணிந்து கொண்டு பணிக்கு வருமாறு கூறி பொது நிர்வாகம் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளரால் வௌியிடப்பட்ட சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. 

வெவ்வேறு இன பெண்கள் அணியும் ஆடைகளில் வித்தியாசம் இருப்பதாகவும் சாரி அல்லது ஒசரி மாத்திரம் அணிய கட்டாயப்படுத்துவது மனித உரிமை மீறல் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியது. 

இந்நிலையில் திருத்தம் செய்யப்பட்ட புதிய சுற்றறிக்கை சற்றுமுன் வௌியிடப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.