ரிஷாட் பதியுதீன் தொடர்பில் வெளியான அதிரடி செய்தி..!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கும், ஏப்ரல்21 பயங்கரவாத தாக்குதல்களுக்கும் தொடர்பில்லை என்று காவற்துறை விசேடக் குழு நடாளுமன்றிற்கு தெரியப்படுத்தியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையாகி சாட்சி வழங்கினார்.

இதன்போது, வேற்று மதத்தினரை கொல்லவோ அல்லது தற்கொலை தாக்குதல் நடத்தவோ இஸ்லாம் கூறவில்லை.

இவர்களை இஸ்லாத்தில் ஏற்க முடியாது.

நான் ஐ.எஸ். அமைப்பை நிராகரிக்கிறேன்.

அந்த அமைப்பை ஒழிக்க அரசாங்கம் செயல்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட் பதியுதீன் குறித்த நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் கூறினார்.

சதோச வாகனங்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளனவா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் வழங்கிய ரிஷாட் பதியுதீன், கடந்த அக்டோபரில் அமைக்கப்பட்ட அரசாங்கத்திற்கு என்னை அழைத்த போதும் தாம் செல்லாததால், தம்மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாக கூறினார்.

அதேநேரம், இந்த கடுமையான குற்றச்சாட்டுகள் குறித்து அவர்கள் காவற்துறையில் முறைப்பாட்டை செய்யக்கூடுமென நான் எதிர்பார்த்திருந்த போதும் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.

எனவே தாமே அவர்கள் மீது முறைப்பாடு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

பயங்கரவாத தாக்குதல் விசாரணையில் தலையிட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளனவா என்றும், முஸ்லீம் மத விவகார அமைச்சின் ஆலோசகரின் மகன் குறித்து இராணுவத் தளபதியிடம் பேசினீர்களா என்றும் அவரிடம் தெரிவுக் குழுவின் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் வழங்கிய ரிஷாட்,  அரச பொது நிர்வாக சேவையின் முதற்தர அதிகாரி எனவும், ஜனாதிபதி சிறிசேன அமைச்சராக இருந்தபோது, அவர் அந்த அமைச்சில் மேலதிக செயலாளராகவும் பணியாற்றினார் என்றும் குறிப்பிட்டார்.

1990 ல் முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட போது அவர் புனர்வாழ்வு இயக்குநராக இருந்தார்.

இனம் தெரியாத குழு ஒன்று தனது மகனை அழைத்துச் சென்றதாகக் கூறி அவர் காவற்துறையில் முறைப்பாடு அளித்துள்ள போதும், காவற்துறையினர் அதனை மறுத்தனர்.

விசேட அதிரடிப்படையும் அவர் குறித்த தகவல் வழங்கவில்லை.
எனவே அவர் தம்மிடம் வந்து கண்ணீருடன் தனது மகன் எங்கே இருக்கிறார் என்று தேடித்தருமாறு கேட்டுக்கொண்டார்.

தெஹிவளை காவற்துறையிடம் கேட்டபோதும், தெஹிவளைக்கு பொறுப்பான பிரதி காவற்துறை மா அதிபர் விக்ரமசிங்கவிடம் கேட்ட போதும் அவர்கள் கைது செய்யவில்லையென்றும் ஆனால் இதனை தேடுவதாகவும் கூறினார்கள்.

எனவே இராணுவத் தளபதியை அழைத்து அவரிடம் இது பற்றி வினவினேன் என்றும், தொடர்ந்து அந்த தந்தையார் கேட்டுக்கொண்டதால் இன்னொரு முறை அழைத்தபோது, இதனை கவனிப்பதாக இராணுவத்தளபதி கூறியதாகவும் தெரிவித்தார்.

மீண்டும் இராணுவத் தளபதியை அழைத்தபோது கைதை உறுதி செய்த அவர், கைதானவரை காவற்துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென கூறினார்.

அதன் பிறகு தான் மீண்டும் அழைப்பை ஏற்படுத்தவில்லை என்றும் றிசாட் குறிப்பிட்டார்.

துருக்கி தீவிரவாதிகள் பற்றிய தகவல்களை அனுப்பியுள்ளது உங்களுக்குத் தெரியுமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு தமக்கு அது குறித்து தெரியாது என்று கூறினார்.

அதேநேரம் காத்தான்குடியில் பெரிய அரசியல் என்று எதுவும் இல்லை எனவும், எங்களிடமிருந்து ஒரு பிரதேச சபை உறுப்பினர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றும் கூறினார்.

பயங்கரவாத செயல்கள் குறித்து சம்பவத்திற்கு முன்னர் அறிந்திருந்தீர்களா என்று ரிஷாட்டிடம் தெரிவுக் குழுவின் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் வழங்கிய அவர் இந்த சம்பவத்திற்கு முன்னர் பயங்கரவாத குழுவின் செயற்பாடுகள் பற்றி தமக்கு தெரியாது என்று கூறினார்.

அதேநேரம் ஸஹ்ரான் ஒரு மௌலவியோ, மதத் தலைவரோ அல்ல என்றும் அவர் மட்டுமே தன்னை மௌலவி என்று அழைத்துக் கொண்டது என்றும் கூறினார்.

2015 இல் வாக்களித்தவர்கள் சஹ்ரானுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியுமா? என்று உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

இது குறித்து இந்த தெரிவுக் குழுவில் சொல்வதை நான் கேள்வியுற்றதாகவும், பின்னர் தமது கட்சியின் உறுப்பினர் அமீர் அலியிடம் கேட்டபோது அவர், அத்தகைய ஒப்பந்தம் எதுவும் கையெழுத்திடப்படவில்லை என்று கூறினார் என்றும் றிசாட் தெரிவித்தார்.

மொஹமட் சஹ்ரானை சந்திக்கவில்லை என்று றிசாட் பதியுதீன் கூறிய போதும், அவர்கள் இருவரும் சந்தித்த படங்கள் வெளியானமை தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, அந்த படம் அக்டோபர் 15, 2015 அன்று அரபுக் கல்லூரியில் நடந்த விழாவில் எடுக்கப்பட்ட படம் என்றும், இது ஸஹ்ரான் அல்ல, அது மௌலவி நிஸ்தார் என்றும் றிசாட் பதிலளிதார்.

மேலும் மௌலவி நிஸ்தார், தன்னை ஸஹ்ரான் என்று தொலைக்காட்சியில் காட்டியதாக அவர் தமக்கு கடிதம் மூலம் தெரிவித்ததாகவும் ரிஷாட் படம் ஒன்றை காட்டி சுட்டிக்காட்டினார்.

இவை தவறான குற்றச்சாட்டுகள்.
சஹ்ரானை வாழ்நாளில் கண்டதில்லை.

தாக்குதலின் பின்னரே சஹ்ரானின் படத்தை கண்டேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வில்பத்து காணிகள் குறித்தும் அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

2015ம் ஆண்டுக்குப் பிறகு, வடக்கு மாகாணத்திற்கு எந்த நிலமும் வழங்கப்படவில்லை என்றும், வில்பத்து தேசிய பூங்காவிற்குள் ஒரு குடும்பத்திற்கு கூட நிலம் வழங்கப்படவில்லை என்றும் கூறினார்.

மன்னாரில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டது.

இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதி ஒரு குழுவை நியமித்தார்.

வில்பத்து தேசிய பூங்காவுக்குள் மீள்குடியேற்றம் நடக்கவில்லை என்று அதன் அறிக்கை கூறுகிறது.

அதேநேரம், அரபு மொழிகளில் பெயர் பலகைகளை காட்சிப்படுத்துவதை தாமும் எதிர்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மீது தவறான செய்திகளை வெளியிடும் ஊடக நிறுவனங்களின் தலைவர்களிடம் விசாரணையை நடத்துமாறு தெரிவுக்குழுவிடம் கேட்டுக் கொண்டார்.

ரிஷாட் பதியுதீனின் சாட்சியத்தை அடுத்து விசேட அறிவிப்பொன்றை விடுத்த தெரிவுக்குழுவின் உறுப்பினரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி, பதில் காவற்துறை மா அதிபர் நியமித்த விசேட காவற்துறை குழு - பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களுடன் ரிஷாட்டுக்கு தொடர்பில்லையென்று தெரிவுக்குழுவுக்கு அறிவித்திருப்பதாக அறிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.