இஸ்லாம் பாட நூலுக்கு எதிராக, பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு


பாடசாலை இஸ்லாம் பாட நூல்களில் உள்ள அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான விபரங்களை நீக்குமாறு கோரி, பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

பௌத்த தகவல் கேந்திர நிலையமும், சிங்கலே அமைப்பும் இந்த முறைப்பாட்டை நேற்று(24) பதிவு செய்துள்ளன.

முஸ்லிம் மதத்திலிருந்து மாறுகின்றவர்களையும், முஸ்லிம் அல்லாதவர்களையும் கொலை செய்து தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று இஸ்லாம் சமய பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அண்மையில் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சியமளித்த இஸ்லாமிய மதத்திலிருந்து வெளியேறிய நபர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

குறித்த கருத்தினை அடிப்படையாகக் கொண்டு, பாடசாலை மட்டங்களிலேயே பயங்கரவாதம் போதிக்கப்பட்டு வந்துள்ளது எனப் பிக்குகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனைத் தடுத்து நிறுத்த கல்வி அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.