முஸ்லிம் அமைச்சர்கள் உண்மையாகவே பதவி விலகியுள்ளார்களா?
அரசாங்கத்தின் பொறுப்புக்களிலிருந்து இராஜினாமா செய்த முஸ்லிம் அமைச்சர்கள் ஒன்பது பேரின் இராஜினாமா கடிதம் மாத்திரமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இதுவரை ஒப்படைக்கப்படாதுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

அதேபோன்று, இவ்வாறு இராஜினாமா செய்த எவரும் தமது உத்தியோகபுர்வ வாகனங்களை ஒப்படைக்காதுள்ளதாகவும், தமது தனிப்பட்ட செயற்குழு உறுப்பினர்களை நீக்க வில்லையெனவும் அந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த திங்கட்கிழமை அரசாங்கத்தில் அங்கம் வகித்த, முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த, அமைச்சரவை அந்தஸ்து உடைய, அமைச்சரவை அந்தஸ்து அற்ற, இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் அனைவரும் தமது அமைச்சுப் பொறுப்புகளிலிருந்து விலகுவதாக அலரி மாளிகையில் செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அறிவித்திருந்தனர்.

அமைச்சுப்பதவிகளைத் துறப்பதாக அறிவித்த அதேவேளை, அரசாங்கத்திற்கு தாம் வழங்கும் ஆதரவு இன்னமும் தொடர்வதாகவும், தாம் நாடாளுமன்றத்தின் பின்வரிசையில் அமரவுள்ளதாகவும், அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இதேவேளை, குறித்த முஸ்லிம் அமைச்சர்களின் பதவி விலகல் குறித்து அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கான எந்தவொரு பணிப்புரையும் தமக்கு ஜனாதிபதி செயலகத்திலிருந்து கிடைக்கப்பெறவில்லையென அரச அச்சகம் தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச அச்சகத் தலைவர் திருமதி கங்கணி கல்பனி லியனகேயைக் கோடிட்டே இந்தத் தகவல் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

நாட்டின் அரசியலமைப்பின்படி, அமைச்சரொருவர் தனது அமைச்சுப் பதவியை விட்டு விலகுவதர்கு தீர்மானிக்குமிடத்து, அது தொடர்பான பதவி விலகற் கடிதத்தை, ஜனாதிபதி வசமே ஒப்படைக்க வேண்டுமென, தெரிய வருகின்றது.

இந்த நிலையில், குறித்த பதவி விலகற் கடிதங்கள் ஜனாதிபதி வசம் ஒப்படைக்கப்படாதவிடத்து, பதவி விலகியதாக அறிவித்துள்ள குறித்த முஸ்லிம் அமைச்சர்கள் தொடர்ந்தும் தம் அமைச்சுப் பொறுப்புகளிலிருந்து சட்ட ரீதியாக விலகவில்லையென அந்தச் செய்தி உணர்த்துகின்றது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.