நாட்டு முஸ்லிம்களுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் விடுக்கும் முக்கிய செய்தி.இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை இன்று (5ஆம் திகதி) கொண்டாடுகின்றனர்.

ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பலரும் தமது வாழ்த்துச் செய்திகளை பகிர்ந்துள்ளனர்.

அடுத்தவர்களது பசியை உணர்ந்து அவர்களுக்கு கொடுத்து வாழ்வதற்கு பழகும் சமயத்தை பின்பற்றும் சமூகம் மனித குலத்திற்கு கிடைத்த கொடை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமது சமயக் கடமைகளை நிறைவுசெய்து இன்றைய தினத்தில் ஈகைத் திருநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

அனைவரினதும் பிராத்தனைகளால், சூழ்ந்திருக்கக்கூடிய அவநம்பிக்கை, சந்தேகம் ஆகியன நீங்கி சகோதரத்துவத்துடன் கைகோர்த்து வாழக்கூடிய எதிர்காலம் அமையும் என எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தமது வாழ்த்துச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஒரு மாத காலம் நோன்பு நோற்று இன்றைய நாளில் ஈதுல் பித்ர் பெருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

நன்றியுணர்வு, தாராள மனப்பான்மை உள்ளிட்ட உயர்ந்த எண்ணங்களை உலகுக்கு எடுத்துக்காட்டுவதாய் இன்றைய நாள் அமைந்துள்ளதாக பிரதமர் தனது வாழத்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஒற்றுமை, சுதந்திரம், சமத்துவம் மற்றும் மனித விழுமியங்களுக்கு மதிப்பளித்து அனைவரும் ஒருதாய் மக்கள் என்ற ரீதியில் செயற்பட வேண்டுமென்பதை ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் உணர்த்துவதாக பிரதமர் வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.