முஸ்லிம் பிரபாகரன் ஒருவரை உருவாக்க வேண்டாம்- ஜனாதிபதி



முஸ்லிம் பிரபாகரன் ஒருவரை உருவாக்குவதே கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதலின் நோக்கம் எனவும், அந்த நோக்கத்தை நிறைவேற்றும் விதத்தில் யாரும் செயற்பட வேண்டாம் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நோக்கங்களை நிறைவேற்றும் பிரகாரம் செயற்படுவதனால், அவர்களே வெற்றி பெறுகின்றனர். இதற்கு இடமளிக்காமல் செயற்படுவதனாலேயே நாம் அவர்களைத் தோல்வியடையச் செய்யலாம் எனவும் ஜனாதிபதி கூறினார்.

பயங்கரவாதிகள் குண்டுத் தாக்குதலை நடாத்தியது உயிர்களைப் பறிக்க மாத்திரமல்ல. பொருளாதாரத்தை அழிக்கவும்தான்.

கடந்த பயங்கரவாத தாக்குதலின் பின்னர் நாட்டுக்கு ஏற்பட்ட பிரதான இழப்பு, இன, மத ரீதியாக நாட்டுக்குள் பிளவு ஏற்பட்டதாகும். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்துக் கொண்டு பெரும்பாலான அரசியல்வாதிகள் இனவாதத்தையும், மத வாதத்தையும் தூக்கிப் பிடித்துள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் கூறினார்.

நேற்று (08) முல்லைத்தீவில் இடம்பெற்ற பொது நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.