சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: அஸ்கிரிய மகநாயக்க தேரருக்கு எதிராக முறைப்பாடுகள்.


முஸ்லிம்களுடன் தொடர்புபடுத்தி அஸ்கிரிய மக நாயக்க தேரர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் அண்மையில் வெளியிட்டதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பில் இரு முறைப்பாடுகள் பொலிஸ் தலைமையகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

அஸ்கிரிய மக நாயக்க தேரரின் கருத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியே இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

பிரபல சமூக ஆர்வளர் பாக்கியசோதி சரவணமுத்து மற்றும் தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த மொஹமட் பஸால் நிஸார் என்ற இருவரே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளனர்.

இந் நிலையில் அவ்விரு முறைப்பாடுகளும் பொலிஸ் தலைமையகத்தால் பொலிஸ் சட்டப் பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.