வவுனியாவில் அதுரலிய ரத்ன தேரருக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டம்!!!!அமைச்சர் ரிசார்ட் பதியுத்தீன் , ஆளுநர்களான ஹிஸ்புல்லா மற்றும் அசாத்சாலி ஆகியோரை  உடனடியாக பதவி விலக கோரி  அத்துரலிய தேரர் கண்டியில் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை நான்கு நாட்களாக மேற்கொண்டுவரும் நிலையில் அவருக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல பகுதிகளும் ஆதரவு போராட்டங்கள் வெடித்துள்ளது.

இந்நிலையில் வவுனியா A9 பிராதன வீதியில் முத்துமாரியம்மன் தேவஸ்தான கோவில் சந்தியில் 42 வயதுடைய தேவராஜா கோபாலகிருஷ்ணன் என்பவரால் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அத்துரலிய தேரரின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு எதுவிதமான குரல் கொடுக்காது சுகபோக வாழ்வை வாழும் தமிழ்தேசிய கூட்டமைப்பினரை கண்டித்தும் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

இதேவேளை இவருக்கு ஆதரவாக வவுனியாவில் பலர் கரம்கொடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.