ஞானசார தேரருக்கு மீண்டும் சிறைத்தண்டனை...???


பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஹோமகமை நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையை, கட்டாய சிறைத்தண்டனையாக மாற்றுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு அடுத்த மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 

இதற்கமைய, அடுத்த மாதம் 22 ஆம் திகதி இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த மனு, சிசிர டீ அப்ரு, முர்து பெர்ணான்ந்து மற்றும் காமினி அமரசேகர ஆகிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழு முன்னிலையில் நேற்று கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

குறித்த மனு, காணாமல் ஆக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி, சந்தியா எக்னெலிகொடவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பான வழக்கு ஹோமாகமை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற போது, சந்தியா எக்னெலிகொடவுக்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டுக்காக கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஆறு வருட கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

எனினும், குறித்த தண்டனையை இரத்து செய்யுமாறு கோரி ஞானசார தேரர், ஹோமகமை மேல்நீதிமன்றத்தில் மேன்முறையீடொன்றை செய்திருந்தார்.

இதனை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட, ஹோமகமை மேல் நீதிமன்றம், ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த ஆறு வருட கால சிறைத் தண்டனையை, ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையாக மாற்றி தீர்ப்பளித்தது.

இந்த நிலையிலேயே, ஞானசார தேரருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டமை, சட்டத்துக்கு முரணானது எனவும். அந்த தண்டனையை நீக்கி ஆறு மாத கால சிறைத்  தண்டனையை விதிக்குமாறும் கோரி, சந்தியா எக்னெலிகொடவினால், உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.