அஸ்கிரிய மகாநாயக்க தேரரின் கருத்தை முற்றாக நிராகரிக்கிறேன் – தலாய்லாமா


முஸ்லிம்கள் தொடர்பில் அஸ்கிரிய மகாநாயக்க தேரர் வரக்காகொட ஞானரத்தன தேரர் தெரிவித்த கருத்தைத் தான் முற்றாக நிராகரிப்பதாக திபெத்திய பெளத்த ஆன்மீக தலைவர் தலாய்லாமா தெரிவித்துள்ளார்.

நான் ஒரு பெளத்தன், பெளத்த மதத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது, எனினும் நான் ஏனைய அனைத்து சம்பிரதாயங்களையும் மதிக்கிறேன் எனத் தெரிவித்துள்ள அவர், முஸ்லிம்களின் வியாபாரங்களைப் புறக்கணிக்க வேண்டும் எனவும் முஸ்லிம்கள் மீது கல்லெறிந்து கொலை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்த அஸ்கிரிய மகாநாயக்க தேரரின் கருத்தை முற்றாக நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக முழுமூச்சுடன் செயற்பட வேண்டிய ஒருவர் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது பாரிய தவறாகும் எனவும் தலாய் லாமா மேலும் குறிப்பிட்டுள்ளார். 

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.