இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்களை சந்தித்தார் ஜனாதிபதி

இஸ்லாமிய நாடுகள் ஒன்றியத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை, ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன சந்தித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்றையதினம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

பாகிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம், சவுதி அரேபியா, குவைட், கட்டார், ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா, துருக்கி, மலேசியா, பலஸ்தீன், பங்களாதேஷ், மாலைதீவு, ஈராக், லிபியா, ஈரான் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளின் இராஜதந்திரிகள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி, தேர்தல்களை இலக்காகக்கொண்டு இனங்களுக்கிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் அரசியல்வாதிகள் இனவாத கருத்துக்களை வெளியிட்டாலும் அரச தலைவர் என்ற வகையில் அனைத்து பிரஜைகளினதும் மரியாதையையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து குறித்த நாடுகள் இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பிற்காக அந்த நாடுகளின் தூதுவர்களுக்கு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேநேரம், எதிர்காலத்திலும் இலங்கைக்கு பொருளாதார உதவிகளை வழங்குமாறும், சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதற்கு விடுத்துள்ள தடைகளை நீக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இந்த நிலையில், எத்தகைய சூழலிலும் பயங்கரவாதத்தை வன்மையாக கண்டிப்பதாக குறித்த சந்திப்பில் பங்கேற்ற வெளிநாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் தெரிவித்துள்ளனர் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.